Sunday, 17 December 2017

002-உயிரைத்தேடி....

வணக்கங்கள் பிரியமானவர்களே...
நமது ஹாபியான சித்திரக்கதை வாசிப்பு என்பது விசித்திரமானதொன்றாகும். இன்றுவரை இதன் நீள அகலங்களில் நீந்தித் திளைத்துத் திரியும் சுறாக்கள் ஏராளம். அவற்றுக்குத்தான் தெரியும் கடலைத் துளைத்து நீரைக் கிழித்து எம்பிக் குதித்து கடலை ஆள்வது எத்தனை இன்பமானது என்று... ஆனால் காலை வைத்தே பார்க்க அஞ்சி தொலைவில் நின்று கடலா? அதோ நீண்டு கிடக்கிறது பார்..அலை இழுத்துக் கொண்டு போய்டும்...தூர வந்துடு செல்லம்...என்று பல வாசகர்களை இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கவிடாமல் வார்த்தைகளால் குத்திப் பார்க்கும் நபர்களுக்குத் தெரியாது அந்தக் கடல் எத்தனை கொண்டாட்டமானதொரு இடம் என்பதும் கடலில் காதலோடு நீந்தித் திரிவதில் உள்ள இன்பமும்....

நிற்க...
   இது உயிரைத்தேடி...பகுதி இரண்டு...22.01.1988 ஒரு வெள்ளிக்கிழமையன்று தினமலர் நாளிதழால் வெளியிடப்பட்ட சிறுவர் மலர் இலவச இணைப்பில் காணக்கிடைத்த அற்புதமான தொடர்தான் இந்த உயிரைத் தேடி... சிறுவன் பிங்கி ஒரு அபூர்வமான இரத்தப்பிரிவை சேர்ந்தவன். அவனுடைய உற்றார், உறவினர், பெற்றோர், சுற்றம் அனைத்தும் ஏதோவொரு இனம்புரியாத நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றனர். அப்படிப்பட்டதொரு துன்பியல் சூழலில் குட்டிப் பையன் பிங்கி வேறெங்காவது சக ஜீவன்கள் தென்படுகின்றனவா என்று தேடிப் புறப்படுகிறான். அவனது பயணத்தில் அவன் சந்திக்கும் உயிர்கள்...அவைதான் இந்தத் தொடரை ஒவ்வொரு வாரமும் நாம் தேடித்தேடி மாய்ந்து மாய்ந்து வாசிக்க மிகவும் ஆர்வத்தைத் தூண்டி விட்ட காரணிகள். 

      இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் உங்களை வெவ்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லும். கைகாட்டியாக நாங்கள் காமிக்ஸ் வாசகர்கள் அனைவரும் இங்கே கரம்கோர்த்து நிற்கிறோம்... வாசித்துத் தெளிவடையுங்கள். நாங்கள் வெறும் காமிஸ் வாசகர்களா, இல்லை அற்புதமான கற்பனைக்கெட்டாத ஒரு பயணத்தில் உங்களை விடப் பல மைல்கள் முந்திச் செல்லும் விண்கலத்தில் பயணிக்கும் பயணிகளா என்பதை  நீங்களே வாசித்து முடிவெடுங்கள்... சித்திரக்கதைகள் சிறார்களுக்கானவைகள் மட்டுமல்ல அவை எதிர்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்க்கும் ஒரு முயற்சி...

ஒத்துழைத்த அத்தனை நண்பர்களையும் நினைவுகூறும் சிறு முயற்சி இது...

தொடர்புடைய தளங்கள்...
http://muthufanblog.blogspot.in

 என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்...ஜானி சின்னப்பன்..

Friday, 15 December 2017

001-உயிரைத்தேடி....


வணக்கங்கள் நட்பூக்களே... 
மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத்  தேடியையே எடுத்துக் கொள்ளுங்களேன்.. மிக அபூர்வமான ஒரு புத்தகம். இன்று வெள்ளிக்கிழமை நல்ல தினத்தில் பதிவிட்டு ஒரு துவக்கம் கொடுத்துள்ளேன்.   
இதுவரையில் வந்து தரிசித்த நண்பர்களின் எண்ணிக்கை 225
போனிலும் முகநூல் மூலமாகவும் சில நண்பர்கள் மாத்திரமே தொடர்பு கொண்டு விரைவில் வெளியிடுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இங்கே வலைப்பூவை எட்டிப் பார்த்து விட்டு கிளம்பிச் செல்லும் நண்பர்களின் எண்ணங்கள் என்னவாக இருக்க முடியும்? அவர்கள் ஏன் எத்தனை முயற்சி எடுத்தாலும் ஒரு நாலு வரி பாராட்டியோ திட்டியோ எழுதுவதில்லை என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இணைய உலகில் எல்லாம் எளிதாக கிடைத்து விடுகிறதுதான். ஆனால் அந்த எளிதாக கிடைப்பதற்கும் ஒரு விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. யாரோ ஒருவர் தங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டே இந்த சாதனைகளை தவமாகப் புரிந்து எத்தனையோ தியாகங்களை மேற்கொண்டே செய்து தீர்க்கின்றனர். அவர்களை எந்த விதத்தில் நீங்கள் அங்கீகரிக்கபோகிறீர்கள்? உங்கள் நாலு வரி பாராட்டுக்கு  எத்தனை பலமுண்டு என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?
இந்த கதையைப் பொறுத்தவரை எனது சிறு வயதில் என் தாத்தா திரு.அமிர்தன் (தந்தை பெயர்இன்னாசி முத்து ) அவர்கள் என்னை தேநீர் அருந்தும் கடைக்கு அழைத்து செல்லும்போது அங்கே இருக்கும் சிறுவர் மலர் இதழை புரட்டுவேன். அதில் வந்த இந்தத் தொடர் என் மனத்துடன் ஒன்றிப் போனது. இந்தக் கதையில் வரும் பிங்கியோடு ஜானி என்ற என் பெயர் உள்ள தோழனும் இணைந்து இந்த அழிவால் பாதிக்கப்பட்ட உலகைச் சுற்றி வலம் வந்து யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்கிற தேடலை மேற்கொள்ளும்போது அவர்கள் படும் துன்பங்களும் சோதனைகளும் அவர்களுக்கு நேரிடும் அபாயங்களும் மிரட்டலாக அமைக்கப்பட்டிருக்கிறது... 

இந்தத் தொடர் துவக்கம் கண்டது...15,ஜனவரி-1988
அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை தினம்தான்..
நிறைவை எய்தியது மார்ச் 10 -1989 ல்.


சிறுவன் ஜானிக்கு ராணி காமிக்ஸ் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே இந்த தொடரும் வாசிக்கக் கிடைத்தது அவன் செய்த பாக்கியம். அந்த ஆனந்தத்தை உங்களோடு சேர்ந்து மீண்டும் ஒரு முறை... 
சாத்தியப்படுத்திய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும் ஒருங்கிணைத்த திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் சில பாகங்களை நேரில் சந்திக்காவிட்டாலும் கொடுத்தனுப்பி உதவிய அய்யம்பாளையத்தார் திரு.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும்..சில பாகங்களை ஸ்கான் செய்து தந்து உதவிய திரு.சதீஷ் ஈரோடு அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ளக்கடமைப்பட்டிருக்கிறோம். 
இந்தத் தொடர் தி வாக்கிங் டெட் என்கிற பிரபலமான காமிக்ஸ் தொடரை வெளியிட்ட பதிப்பகத்தின் ஆரம்பகால முயற்சிகளுள் ஒன்றாகும்..  
குறிப்புகள்:


மொத்தம் அறுபத்தொரு பாகங்களாக வெளியாகியுள்ளது இந்தத் தொடர்.. அதாவது அறுபத்தொரு வாரம். நினைத்துப் பாருங்களேன். இத்தனை வாரங்களும் வெள்ளிக்கிழமையன்று தேடித் திரிந்து பிடித்து வாசித்து கதையின் அடுத்தடுத்த பகுதிகளை துரத்திக் கொண்டு பட்டாம்பூச்சிகளாக வலம் வந்த அந்நாட்கள் நினைவில் இனிமையாக நிழலாடுகிறதா??? 

திரு.D.ஹார்ட்டன் எழுத்திலும் திரு.ஓர்டிஸ்  ஓவியத்திலும் அசத்தலாக உருவான இந்தக் கதை வெளியான ஈகிள் இதழின் வெளியீட்டு எண் 279.. 
  
ஈகிள் பத்திரிகையில் வெளியானது 25,july-1987 saturday 
கறுப்பு வெள்ளையில்..தினமலர் நமக்கு வண்ணத்தில் அதுவும் இலவசமாக வழங்கி நமது இளமைப்பருவத்துக்கு பரிசளித்து மகிழ்ந்தது என்றால் மிகையாகாது. அதற்காக தினமலர் நிர்வாகத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்..

நன்றிகள் தினமலர்... 

இந்த தொடரை பாதுகாத்து தன் பொக்கிஷ அறையில் இருந்து வெளிக்கொணர்ந்து உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்கள் இல்லத்தில் விசேஷம் நடக்கவிருக்கிறது. வரும் இருபத்தெட்டாம் தேதி அவரது பெண்ணுக்குத் திருமணம் நடக்கவிருக்கிற இந்த தருணத்தில் கொண்டாட்டத்துடன் கொண்டாட்டமாக இந்தத் தொடரைத் துவக்கியிருக்கிறோம். விரைவில் மீத பாகங்களை நண்பர்கள் உதவியுடன் கொண்டு வரவிருக்கிறோம்.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி...

Saturday, 9 December 2017

ஆத்திச்சூடி_உயிரெழுத்துக்கள்... சிறு சித்திர அறிமுக முயற்சி...

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
சித்திரக்கதைகளையும் இலக்கியங்களையும் தொடர்புபடுத்திப் பார்க்கலாமே என்கிற சிறு முயற்சி இது...
உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு மற்றும் ஒரு ஆயுத எழுத்துக்கான
இந்த ஆத்திச்சூடியை உங்கள் நட்பு வட்டங்களில் கொண்டு சேர்க்கலாமே...?
ஆத்திச்சூடி தொடரும்...நேரம் கிடைக்கும்போதெல்லாம்...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி...
குறிப்பு: எனது பிறந்ததின வாழ்த்துக்களை அள்ளி வீசிய அனைவருக்காகவும் பரிசாக என்ன தரலாம் என்கிற சிந்தனையுடன் இருந்தபோது உங்களுக்கு இலக்கியமெல்லாம் பிடிக்காதா என்று ஒரு கேள்வியை நண்பர் ஒருவர் வீச அதைப் பிடித்துக்கொண்டு ஏறி எடுத்த சிறு கூழாங்கல் இது... அவருக்கும் அனைவருக்கும் நன்றி. 

Friday, 8 December 2017

விக்ரமாதித்தன்-வேதாளம் நீதிக்கதைகள்...சுரேஷ் சந்த்

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
இம்முறை திரு.சுரேஷ் சந்த், கோயம்புத்தூர் அவர்களின் முயற்சியில் மீட்டெடுக்கப்பட்ட விக்கிரமாதித்தன் வேதாளம் நீதிக்கதைகள் உங்களுக்காக... நன்றிகளை அவரது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கலாமே?!?!?

பிடிஎப் ஆக தரவிறக்க:

Tuesday, 5 December 2017

இணையத்தில் உலா வரும் காமிக்ஸ்கள் சில..

📚 *தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள்*  📚

🔰 பலி பீடம்
✳ பார்வதி சித்திரக் கதை
📑 68 பக்கங்கள்
⚖ 26.5 MB அளவு

✅ Download : https://userupload.net/mtr13yly3j7y

🔰 அவள் எங்கே
✳ பார்வதி சித்திரக் கதை-16
❇ வாண்டுமாமா
📑 72 பக்கங்கள்
⚖ 9 MB அளவு

✅ Download : https://userupload.net/sh6b5ji3hql3

🔰 அறிவின் விலை ஒரு கோடி
✳ பார்வதி சித்திரக் கதை-6
❇ கௌசிகன்
📑 76 பக்கங்கள்
⚖ 30.3 MB அளவு
✅ Download : https://userupload.net/qr2vnnjhbzv7

🔰 அபாய நகரம்
✳ ராணி காமிக்ஸ்
📑 61 பக்கங்கள்
⚖ 8.5 MB அளவு
✅ Download : https://userupload.net/tv3lgz4pexx3

🔰 காஷ்மீரில் 007
✳ ராணி காமிக்ஸ்
📑 65 பக்கங்கள்
⚖ 9.2 MB அளவு
✅ Download : https://userupload.net/ejkputvei06t

🔰 சிலையை தேடி
✳ பார்வதி சித்திரக் கதை
❇ வாண்டுமாமா
📑 68 பக்கங்கள்
⚖ 27 MB அளவு
✅ Download : https://userupload.net/dhe2kcogi6o4

🔰 யார் அந்த மாயாவி
✳ முத்து காமிக்ஸ்
📑 95 பக்கங்கள்
⚖ 35.3 MB அளவு
✅ Download : https://userupload.net/4bn62mv1ms6t

🔰 ரத்தினபுரி ரகசியம்
✳ வாண்டுமாமா
📑 60 பக்கங்கள்
⚖ 25.3 MB அளவு
✅ Download : https://userupload.net/e5u0ossm8hul

🔰 பவழத் தீவு
✳ வாண்டுமாமா
✅ பார்வதி சித்திரக் கதைகள் - 1
📑 81 பக்கங்கள்
⚖ 65.1 MB அளவு
✅ Download : https://userupload.net/of5yqymesg15

🔰 திகில் தோட்டம்
✳ வாண்டுமாமா
📑 41 பக்கங்கள்
⚖ 16.7 MB அளவு
✅ Download : https://userupload.net/e1rwg14sce06

🔰 மரகதச்சிலை
✳ வாண்டுமாமா
📑 62 பக்கங்கள்
⚖ 25.5 MB அளவு
✅ Download : https://userupload.net/c3lhum0i8ypq

🔰 நிலாக்குதிரை
✳ வாண்டுமாமா
📑 197 பக்கங்கள்
⚖ 17.1 MB அளவு
✅ Download : https://userupload.net/7d5mztwnhvpa

🔰 கொலை காரன் பேட்டை
✳ ராணி காமிக்ஸ்
📑 66 பக்கங்கள்
⚖ 9.4 MB அளவு
✅ Download : https://userupload.net/zb71l4pwq4e4

🔰 ஷீலாவைக் காணொம்
✳ பார்வதி சித்திரக் கதைகள்-14
📑 30 பக்கங்கள்
⚖ 13.4 MB அளவு
✅ Download : https://userupload.net/cwgqi3oyz07h

🔰 இரவுக் கழுகுகள்
✳ ரேகா காமிக்ஸ்
📑 50 பக்கங்கள்
⚖ 9.1 MB அளவு
⬇ Download : https://userupload.net/9vab6qya0qhu

🔰 இரத்தப் பலி
✳ மலர் காமிக்ஸ்
📑 34 பக்கங்கள்
⚖ 6.4 MB அளவு
⬇ Download : https://userupload.net/uh886g6hql2e

🔰 இயந்திர மனிதன்
✳ ராணி காமிக்ஸ்
📑 68 பக்கங்கள்
⚖ 13.8 MB அளவு
⬇ Download : https://userupload.net/7rwdtd6l49hz

🔰 கொலை களக் குறி '8'
✳ ராணி காமிக்ஸ்
📑 29 பக்கங்கள்
⚖ 16.6 MB அளவு
⬇ Download : https://userupload.net/t69k6u1dd3hd

🔰 முகமூடி மாயாவி தோன்றும் 'அபாய நகரம்'
✳ ராணி காமிக்ஸ்
📑 55 பக்கங்கள்
⚖ 15.4 MB அளவு
⬇ Download : https://userupload.net/87kg0lomba71

🔰 ரத்த வெறியன்
✳ கஸ்தூரி சித்திரக் கதை
📑 52 பக்கங்கள்
⚖ 7.7 MB அளவு
⬇ Download : https://userupload.net/d1u5c0777ime

🔰 காதலியை விற்ற உளவாளி
✳ ராணி காமிக்ஸ்
📑 69 பக்கங்கள்
⚖ 14.1 MB அளவு
⬇ Download : https://userupload.net/vfnrqzzv9tps

🔰 பரலோகித்திற்கு ஒர் பாலம்
✳ லயன் காமிக்ஸ்
📑 61 பக்கங்கள்
⚖ 20.6 MB அளவு
⬇ Download : https://userupload.net/p2pm7qqq7z52

🔰 தூங்காத துப்பாக்கி
✳ பார்வதி சித்திரக் கதை
📑 68 பக்கங்கள்
⚖ 27.1 MB அளவு
⬇ Download : https://userupload.net/ycxyty9lodzb

🔰 மந்திர கம்பளம்
✳ வாண்டுமாமா
📑 244 பக்கங்கள்
⚖ 1.6 MB அளவு
⬇ Download : https://userupload.net/ya26bs2gack5

🔰 கற்கண்டு சிறுகதைகள்
✳ பார்வதி சித்திரக் கதை 25
📑 68 பக்கங்கள்
⚖ 26.5 MB அளவு
⬇ Download : https://userupload.net/g99agb6ggfnv

🔰 சூப்பர் கார்
✳ ராணி காமிக்ஸ்
📑 45 பக்கங்கள்
⚖ 13.9 MB அளவு
⬇ Download : https://userupload.net/s0sbhan6au93

🔰 ராஜாளி ராஜப்பயல்
✳ ராணி காமிக்ஸ்
📑 26 பக்கங்கள்
⚖ 3.3 MB அளவு
⬇ Download : https://userupload.net/5pz4j8b6cp9r

🔰 குற்ற மயக்கு
📑 27 பக்கங்கள்
⚖ 4.1 MB அளவு
⬇ Download : https://userupload.net/su1f7wu06pzt

🔰 புலி வளர்த்த பிள்ளை
✳ வாண்டுமாமா
📑 27 பக்கங்கள்
⚖ 10.8 MB அளவு
⬇ Download : https://userupload.net/it8mdiqg0fbf

🔰 கரடி கோட்டை
✳ வாண்டுமாமா
📑 58 பக்கங்கள்
⚖ 21.5 MB அளவு
⬇ Download : https://userupload.net/6u3nb25e30zm

🔰 கழுகு மனிதன் ஜடாயு
✳ வாண்டுமாமா
📑 59 பக்கங்கள்
⚖ 21.7 MB அளவு
⬇ Download : https://userupload.net/wgjs6zs9muri

🔰 சர்கஸ் சங்கர்
✳ வாண்டுமாமா
📑 31 பக்கங்கள்
⚖ 12.2 MB அளவு
⬇ Download : https://userupload.net/b1ky0q93jfji

🔰 வைரத்தின் நிழல்
✳ இந்திரஜால் காமிக்ஸ்
📑 21 பக்கங்கள்
⚖ 2.4 MB அளவு
⬇  https://userupload.net/xh0y9q88q6sm

🔰 பாம்புத் தீவு
✳ முத்து காமிக்ஸ்
📑 122 பக்கங்கள்
⚖ 27.6 MB

⬇️ https://userupload.net/yzk15fjo01dn

Monday, 4 December 2017

பேய்ச்சிரிப்பு..இதயம் பேசுகிறது..சித்திர சிறுகதை..

வணக்கம் அன்பு நெஞ்சங்களே
இம்முறை இதயத்துடன் பேசிட இதயம் பேசுகிறது இதழில் வந்த ஒரு குறுஞ்சித்திரக்கதையுடன்
உங்கள் முன் நான்....வழமை போல இந்தப் புத்தகத்தைக் கொடுத்து மகிழ வைத்த திரு.ரஞ்சித் மற்றும் திரு.அலெக்சாண்டர் வாஸ் ஆகியோருக்கு நன்றி கூறி உங்கள் முன்....எனக்கு வித்தியாசமாகப் பட்டது இந்தக் கதையை எழுதியவர்...ப?
முற்றும் என்ற வார்த்தைக்குப் பதிலாக முழுதும் என்று உபயோகித்துள்ளார். இதுவும் கவனிக்கத்தக்க விடயம்...
பிடிஎப் ஆக தரவிறக்கம் செய்ய:

மற்றபடி அஹ்ஹஹ்அஹஹாஹ்... 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி... 

002-உயிரைத்தேடி....

வணக்கங்கள் பிரியமானவர்களே... நமது ஹாபியான சித்திரக்கதை வாசிப்பு என்பது விசித்திரமானதொன்றாகும். இன்றுவரை இதன் நீள அகலங்களில் நீந்தித் திளை...