Posts

Showing posts from November, 2012

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

Image
"வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி! சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில்வாகனங்கள் அல்ட்ரா சானிக் வேகத்தில் மிதந்து கொண்டிருந்தன. ஒழுங்கீனமான அகல உயரங்களில் செம்பழுப்பு நிற கட்டிடங்கள் ஆங்காங்கே தென்பட்டன. போரா என்கிற அவன் தன்னுடைய கை கால் உடம்பை தனி தனியாக கழட்டி போட்டு இளஞ்சூடான திரவத்தில் ஊற வைத்து செல்ப் மசாஜ் எடுத்துகொண்டிருந்த அந்த மைக்ரோ வினாடியில் – அவனுக்கான ஏர் பாக்கெட் தகவல் வந்தது."


அன்பின் பிளாட்டின நண்பர்களே! வணக்கமுங்கோவ்! நல்லா இருக்கீயளா! நான் இங்கே சுகம்தாங்க!  சித்திரங்களில் நனைந்து எழுவது என்பது நம்மை போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்கு கை வந்த கலைதான். ஆனால் சில சமயங்களில் வரைய பட்டுள்ள ஓவியம் பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு. ஆனால் என்றும் அள்ள அள்ளக்  குறையாத அமுத சுரபியாக நமது மனவெளி இருப்பதால் நாவல்கள் படிக்க கற்பனை வெளி நமதாக அமைந்து மிக உற்சாகத்தை தூண்டும் விதத்தில் இருப்பது என்பது  நாவல் உலகில் மட்டுமே சாத்தியம். ஒரு சில நாவல்கள் பல காலம் தாண்டியும் படிக்கும் மனதில் வெவ்வேறு வித வண்ண கலவைகளை குழைத்து வண்ணம் தீ…

அதிரடியின் அடுத்த பெயர் -- வாய்னே ஷெல்டன் !!!!

Image
அன்பார்ந்த வாசக பெருமக்களே! வணக்கம். அடுத்து  ஒரு பதிவோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். வீட்ல  எல்லோரும்  சுகமா?  அனைவரையும்  விசாரித்ததாக சொல்லுங்க!   தீபாவளி   எல்லாம் நல்லா போச்சுங்களா? வெடி எல்லாம் நல்லா வெடிச்சதா? தலைவர் டைகரின் தங்க கல்லறையுடன் மகிழ்ச்சியா, திகிலா , சோகமா , கோபமா  இருந்திருப்பீங்க((!!!!!!!!!!!!!)). நானும் அதே!! அதே!! 
             நான் வாண  வேடிக்கை எல்லாவற்றையும் நம்ம ஆசிரியரின் ப்ளாகில் ரசிக்க நேரம் இருந்த அளவிற்கு பின்னூட்டம் போட்டு கலாட்டாவில் கலந்து கலாய்க்க நேரமில்லாமல்  போய்டுச்சி ! அதேன்  என்னோட ஒரே ஒரு வருத்தம்!!!               நண்பர்கள் வடை (அடச்சே!) படை வளர்ந்து கொண்டே வருவது மிக மிக நல்ல விஷயம். அன்புக்கும் அரவணைப்புக்கும் அச்சாணியாக ஆசிரியர் திரு.விஜயன் அவர்கள் இருக்கையில் எந்த குழப்பமும் வெயிலை கண்ட பனியாக, சிங்கத்தை கண்ட சிறு நரியாக மாறி ஓடிவிடும். நம்ம கருத்து கும்மாங்குத்துக்கள் நல்ல ஒரு நிலையை காமிக்ஸ் உலகில் கண்டிப்பாக உருவாக்கும். நாற்பது வயதே கடந்த குழந்தை நம்ம காமிக்ஸ். ஆகவே அது தன்…

தங்கமான போராட்டம்!

Image
அருமை நண்பர்களே! ஆருயிர்த் தோழர்களே!
உங்களில் ஒருவன்! ஜான் சைமனின் இனிய வணக்கம்! தங்கள் வரவு நல்வரவாகுக! இடையே பணியில் சோதனைகளும் பின் சாதனைகளும் அனைவருக்கும் சகஜம்தானே? அடியேனுக்கும் அதே! அதே! மனித வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது? அதை வாழ தெரிந்து கொள்ள எவ்வளவு காலம் பிடிக்கிறது? ஆராய புகுந்தால் வாழ்வும் அதில் சில நிகழ்வுகளும் நம் வாழ்வின் இன்பங்களையும் அதை அனுபவிக்காமல் வெறுமனே ஆராய்ந்தே வாழ்க்கையை தொலைத்து கொண்டிருப்பதையும் அறிந்து கொள்ளலாம்!  பகவான் ஓஷோ கூறுவார்  "ஒரு பூ பூத்திருப்பதை கண்ணால் பார்த்து ரசிக்கலாம். அதனை ஆராய்கிறேன் பேர்வழி என்று களத்தில் இறங்கினால் வெறும் இதழ்கள், இலைகள், மகரந்த தூள்கள், அல்லி வட்டம், புல்லி வட்டம், குறுக்கு வெட்டு தோற்றம், நெடுக்கு வெட்டு தோற்றம் ஆகியவையில் மூழ்கி பூவின் அழகை ரசிக்க மறந்து விடுவீர்கள்" இந்த சிந்தனைகளோடு இந்த பதிவிற்கு வருக வருக என மறு முறை வரவேற்கிறேன்!

  தரணி புகழும் "தங்க கல்லறை" என்ற இந்த நூல் 17  ஆண்டுகளுக்கு முன்னர் முத்து காமிக்ஸ் மூலமாக வெளியிடப் பட்டு விற்பனையில் சக்கை போடு போட்ட கதை. தற்போது மீண்டும் மீ…