Posts

Showing posts from April, 2014

In the view of Thirupoor Blueberry........Chennai Book Sangamam!!!

Image
thanks for the sharing nanbare! bye!!!

துப்பறியும் க்வாக் சுந்தரம்!!!_இது ஒரு குமுதம் காமிக்ஸ்!!!

Image
அன்புள்ளம் கொண்ட காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு!
வணக்கங்கள்!
            நாம் ஏற்கனவே "சிங்கக் கழுகு"என்கிற அமரர் கல்கி அவர்களால் வழிநடத்தப் பட்ட "கல்கி"  இதழின் காமிக்ஸினை  படித்து மகிழ்ந்தோம்!

           இன்று குமுதம் பத்திரிக்கையின்  அருமையான படைப்பான துப்பறியும் க்வாக் சுந்தரம் என்கிற தொடர் கதையை தொடராகவே ரசித்துப் படிக்க உங்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடன்  தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் அழைக்கிறது! தினம் (ஹி ஹி ஹி முடிந்தால்தான்) ஒரு அத்தியாயம் வெளியிட்டு (முகநூலில்)  உங்களை அக மகிழ வைப்பதுதான் எண்ணம்!

ஒரு அட்டகாசமான ஜனரஞ்சக இதழில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய துப்பறியும் கதை இது! ஒரு வாத்தும் அதன் நண்பனும் என்பதே இதில் சிறப்பான விஷயம்!

அந்த தொடர் கதை வெளியான வருடத்தை கவனியுங்களேன்!! சுமார் நாற்பத்தைந்து வருடம் முன்னதாக வெளியாகி குமுதம் வாசகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட வாத்தின் கதை இது! எப்படி ஒரு டொனால்ட் டக் பெயர் வாங்கியதோ அதே போன்று நம்ம க்வாக் கும் நற்பெயரை சம்பாதித்தது! இதைப் படித்து முடித்த பின்னர் நீங்களும் க்வாக் க்வாக் என அன்பர் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் போன்ற…

சென்னை புத்தக சங்கமம்!!! நமது காமிக்ஸ் சங்கமம்!!!

Image
வணக்கம் தோழமை காமிக்ஸ் ரசிக நெஞ்சங்களே! சென்னையின் புத்தக சங்கமத்துக்குள் இரண்டறக் கலக்க உங்களை தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் வரவேற்கிறோம்!! நண்பர் கிங் விஸ்வா சென்னை புத்தக சங்கமத்தைக் குறித்து எமக்களித்த பேட்டியில்  *மொத்தமாக இருநூறு கடைகள் இம்முறை சங்கமிக்கின்றன! *அதில் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் நூறு (நாம் நூறில் ஒருவர்) *புத்தக சங்கமம் என்கிற பெயரை முன்மொழிந்தவர் நண்பர் காமிக்ஸ் ரசிக சிகாமணி யுவ கிருஷ்ணா!!!

 சின்ன பார்சல் மியாவிகள் சங்கமித்துள்ளன! வெறும் ஐம்பதே புத்தகங்கள் வந்துள்ளன இன்று! யாரெல்லாம் கைப் பற்றப் போகிறீர்கள்??

 அண்ணாச்சி வெளுத்துக் கட்டின வேட்டி போல வெளிச்சமாக இருப்பதைக் காணுங்கள்!!! அண்ணாச்சியுடன் இருப்பவர் திரு.கணேசன் அவர்கள் சென்னை குடோனின் பொறுப்பாளர்!


ஒரு சேதி சொல்லவா???
வரும் இருபத்து மூன்றாம் தேதி மட்டும், வழக்கமாக கொடுக்கும் தள்ளுபடி விலையை விட ஐந்து சதவீதம் அதிகமாக, அதாவது பதினைந்து சதவீதம் தள்ளுபடி தரவுள்ளனர்! காரணம் அன்றுதான் உலகப் புத்தக தினம்!!! தகவல் உதவிக்கு நன்றி நண்பர் விஸ்வா அவர்களே!!
அனைத்து நண்பர்களும் வருக ஆதரவு தருக! சென்னை புத்தக சங்கமத…

விவேகன் யோசேப்பு!!

Image
பிரியமானவர்களே!!!
ஆதாமின் தேவனும், ஆபேலின் தேவனும், ஆபிரஹாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமானவர் உங்களை ஆசிர்வதிப்பாராக!!!  கிறிஸ்தவ நேயர்களின் மிக சிறப்பானதொரு நாள் இன்று குருத்தோலை நாள்! இன்றைய தினத்தில்தான் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக இயேசு கிறிஸ்துவானவர் எருசலேம் நகரில் கழுதைக் குட்டியின்மீது ஏறி அமர்ந்தவண்ணம் உள்ளே நுழைகிறார்! அவரது வரவை அவரால் பலனடைந்தவர்கள், அவரது அற்புதங்களை கேள்விப் பட்டவர்கள் ஆவலுடனும் ஆர்வத்துடனும் காத்திருந்து அவரை வரவேற்று மகிழ்ந்து அவர் வரும் பாதை நெடுகிலும் இலைத் தளிர்களையும் குருத்தோலைகளையும் விரித்து சிவப்புக் கம்பள வரவேற்பு போன்று பச்சைக் கம்பள வரவேற்பு நல்குகிறார்கள்!!! அருமையானதொரு சம்பவத்தின் நினைவாக கிறிஸ்தவ மக்களாகிய எங்கள் தரப்பில் கொண்டாடும் தினமே இன்று!!!!       இன்று நாம் வாசித்து மகிழவிருக்கும் விறுவிறுப்பான கதை விவேகன் யோசேப்புவின் வாழ்க்கை வரலாறு! எங்கேயோ பிறந்து எங்கேயோ அடிமையாக விற்கப் பட்டு அங்கே அனாதையாக நிற்கும் அவல நிலை வந்த போதிலும் கிஞ்சித்தும் தளராது அவர் வணங்கிய ஏக தேவனில் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டு தன் மீது தீர…