Posts

Showing posts from June, 2014

3 Days to Kill

Image
Hi,
உல்ப் என்கிற ரஷ்ய தீவிரவாதியை அழித்தொழிக்க வாட்டர் வர்ல்ட் புகழ் நாயகன் கெவின் காஸ்ட்னர் போராடும் திரைப்படம்தான் 3 days to kill...
                நாயகனுக்கு வித்தியாசமான நோய். விரைவில் இறந்து விடுவார் என்கிற சூழலில் தன் மனைவி, பெண் குழந்தையைத் தேடி பாரிஸ் வந்து சேர்கிறார். உல்பை பிடிக்க முயற்சித்து தோல்வி தழுவும் அவரை CIA உளவு வேலையில் இருந்து விடுவித்து விட்ட சோகம் வேறு. இந்த நிலையில் உல்ப் பாரிஸில் சுற்றிக் கொண்டிருக்க தன் குடும்பத்தைத் தேடி வந்த நாயகனும் பாரிஸில் இருக்க அமெரிக்கா ஒரு பெண் உளவாளியை அனுப்பி வைக்கிறது. அவள் நாயகனுக்கு தன் வழிக்குக் கொண்டுவர ஒரு சோதனை நிலையில் இருக்கும் ஊசி மருந்தினையும் தன்னுடன் கொண்டு வந்து கொடுத்து நாயகனைத் தூண்டி விட ஒரு பக்கம் குடும்பத்தில் சமாதானம் கொண்டு வர வேண்டும். அதே நேரம் உல்ப் சார்ந்த அனைத்து நபர்களையும் அழித்து ஒழிக்க வேண்டும். நாயகன் மகளோ தன் டீன் வயது குழப்பங்களுடன் திரிந்து கொண்டிருக்கிறாள். அவளை வழிப்படுத்த வேண்டும். கணவனை நீண்ட காலம் பிரிந்து இருந்த மனைவியின் கோபம். அப்பாவைப் பிரிந்து இருந்த மகளின் கண்ணீர். தன் குடும்பத்தினை இவ…

பழங்கள் வாங்குவோர் கவனத்திற்கு...

Image
அன்பு வாசக தோழர்களே! இனிய வணக்கங்கள்!!!       இம்முறை ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் தங்களை சந்திக்கிறேன். முக்கனிகள் மா, பலா, வாழை. அவற்றில் மாம்பழம் என்றாலே திருட்டு மாங்காய் அடித்து ஆடிய பழைய நினைவலைகள் வந்து போவது இயற்கை.      கொட்டிக் கிடக்கும் மாம்பழங்களின் காலமிது. நாம் வாங்கும் மாம்பழங்களை எவ்வாறு தெரிவு செய்கிறோம்? நம்ம தேர்வு சரியானதுதானா? என்கிற கேள்விகளுக்கு இந்தத் தகவல் ஒரு சிறந்த அளவீடாக இருக்கும் என்று கருதுகிறேன்.       நம்ம க்ரைம் நாவல் 171 - ஒரு முல்லைப் பூவின் முடிவு 2010 ல் வெளியாகிப் பட்டையைக் கிளப்பிய ஒரு நாவல். இதில் வெளியான விளக்கம் ப்ளீஸ் விவேக்கில் வந்த ஒரு கேள்வி பதிலில் ஒரு பழம் இயற்கையாகப் பழுத்ததா இல்லை செயற்கையாகப் பழுத்ததா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என எஸ்.லோகநாதன், அனுப்பர்பாளையம், திருப்பூர் என்ற வாசகர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அண்ணன் ராஜேஷ் குமார் அவர்கள் அளித்த விடை இந்த நேரத்தில் மிகுந்த உதவியாக இருக்கும் என்கிற எண்ணத்தில் விடையை அப்படியே தருகிறேன். நன்றிகள் கேட்டவர்க்கும், விடை பகன்ற அருமை அண்ணனுக்கும், பதிப்பித்த அன்பு அண்ணன் அசோகனுக்கும்.

விஸ்வாவின் விஸ்வரூபம்!!!

Image
அருமை காமிக்ஸ் உலாவல் மேற்கொள்ளும் தோழர்களுக்கு என் இனிய வணக்கங்கள்!         நண்பர் கிங் விஸ்வாவை அறியாதோர் இருக்க முடியாது! பல மரமண்டைகளுக்கிடையே மலர்ந்த மல்லிகை இவர்.  விமர்சனங்களை ஓரம் தள்ளி தனது பாணியில் பதில் கொடுத்துள்ளார் என்றே நினைக்க வைக்கிறது இவர்தம் கலக்கல் அணுகுமுறைகள்! புதிதாக தமிழ் காமிக்ஸ் உலகம் பதிப்பகத்தினைக் கொண்டுவந்ததுடன் தில்லாக முதலில் காமிக்ஸ்களை களம் இறக்காமல் காமிக்ஸ் மட்டுமில்லை இன்னும் பல சாதனை இதழ்களை வெளியிடவிருக்கிறோம் என தமிழ் கூறும் நல்லுலகுக்கு தன் வரவை அழுத்தமாகத் தெரிவிக்கும் வண்ணம் சிங்கப்பூரில் சிகரம் தொட தொடர்ந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் அருமை சகோதரி கிருத்திகா அவர்களின் (முத்து விசிறியாரின் துணைவி இவர் என்பது தனிச்சிறப்பு!!!). அருமையான பயண நாவலான உல்லாசக் கப்பல் பயணத்தினை நாவல் வடிவிலேயே வெளியிட்டு தனது இன்னிங்க்சை வெற்றிகரமாகத் துவக்கியுள்ளார். வாழ்த்துக்கள் தோழர் விஸ்வா!!!  வாண்டு மாமாவை சந்திக்க நினைத்தபோதெல்லாம் எங்கள் பணிகளின் கடுமையைத்தாண்டி சென்று தரிசிக்க முடியாமல் போய்விட்டது. சொக்கலிங்கம் சாரிடம் இதுகுறித்து சமீபத்தில்…