Posts

Showing posts from October, 2014

இறைவன் மோசேயை எகிப்துக்கு அனுப்புகிறார்!!! jw.org காமிக்ஸ் வரிசை.....

Image
ஒரு சின்னஞ்சிறு புதர். திடீரெனப் பற்றி எரிவதை மோசே ஆடு மேய்க்கும்போது காண்கிறார். அது என்ன என பார்க்க அருகில் செல்கிறார். முட் புதரினின்று இறைவன் மோசேயோடு இடைப்படுகிறார். மோசேவை எப்படி தேவன் பயன்படுத்தி இஸ்ரேலிய மக்களை எகிப்தினின்று மீட்டார் என்பதை இந்த சித்திரக்கதை எடுத்துரைக்கிறது. சித்திர வடிவப்படுத்திய jw.org யெகோவாவின் சாட்சிகள் சபையினருக்கு எங்கள் காமிக்ஸ் நண்பர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இவ்வாறு இஸ்ரேலிய மக்கள் தங்களது அடிமைத்தனத்தின் வீடான எகிப்தினின்று இறைவனின் திருச்சித்தத்தால் மீட்கப்படுகின்றனர். மீண்டும் சந்திப்போம் தோழர்களே! 

கறுப்புக் கிழவியின் திகில் கதைகளின் பட்டியல்!!!

Image
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
கருப்பாய் நம்மை மிரட்டும் ஹெப்ஸிபா கிரிம் கிழவியின் கதைகள் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் கோல்ட் கீ காமிக்ஸில் வெளியாகி நம்மை பரவசப் படுத்த பின்னர் திகில் மூலமாக நம்மை அன்பு ஆசிரியர் விஜயன் அவர்களது அற்புதமான மொழிபெயர்ப்புடன் நம்மை சந்தித்து சாதித்தது காமிக்ஸ் உலகின் வரலாறு! திகில் காமிக்ஸ் வரிசையில் இரவே இருளே கொல்லாதே வந்து இந்த தீபாவளிக்கு நம்மை உலுக்கிக் கொண்டுள்ள இந்த நேரத்தில் கறுப்புக் கிழவியின் கதைகளை மீண்டும் ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்க்கும் விதத்தில் வந்துள்ளதுதான் இந்தப் பதிவு. பிழை இருப்பின் சுட்டிக்காட்டுக. அப்படியே திருத்தி ஒருவாறு சரி செய்திடலாம்!(ஹீ ஹீ ஹீ ஒரு வழி பண்ணிடலாம்!!!)

திகில் வெளியீடு பன்னிரண்டில் மர்ம சவப் பெட்டிகள் இதழில் முதல் விளம்பரம் வெளியாகிறது..


ஜனவரி 1987 விளம்பரம் புத்தம் புதிய கதைகள் குறித்து அதில் ஒரு விளம்பரம் கறுப்புக் கிழவியை அடையாளம் காட்டுகிறது. அதே இதழின் முதல் கறுப்புக் கிழவி கதையின் விளம்பரம் “பிசாசுக் கல்யாணம்”

கறுப்புக் கிழவி கதைகள் பட்டியல் .... திகில் வெளியீடு _13 மரண விளையாட்டு (ஜான் ரேம்போ சாகசம்) 1)“மரணப் பகை” முத…

மோசே எகிப்தில் வளர்கிறார்_விவிலிய சித்திரத் தொகுதி_JW Comics_jw.org

Image
அன்பார்ந்த காமிக்ஸ் குடும்ப வாசகர்களே! அனைவருக்கும் எனது அன்பின் வாழ்த்துக்கள்! பட்டாசு வெடித்து மகிழ்ந்திருப்பீர்கள். காமிக்ஸ் உலகில் திகட்டத் திகட்டத் தமிழ் மொழிபெயர்ப்பு காமிக்ஸ் வாசிப்பில் புன்னகை சதவீதத்தை அதிகப்படுத்திக் கொண்டும் இருப்பீர்கள் என நம்புகிறோம். நண்பர்கள் தங்களது கருத்துகளையும் அவ்வப்போது பகிரலாமே? தோழர்கள் தங்களது மகத்தான நேரத்தையும் காலத்தினையும் இதில் செலவழித்தே தங்களுக்கு விருந்து படைத்து இருக்கின்றனர் என்பதனை சில வார்த்தைகள் பகிர்ந்து நன்றாக இருந்தது அல்லது இல்லை என்பது குறித்தோ இந்த வசனம் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம் என்பது போன்ற கருத்துகளையோ கொடுத்து உதவலாம்.  நிற்க!  நண்பர் மோசேயின் பால்ய காலம் காமிக்ஸ் வடிவில் சிறுவர்களுக்கு உதவும் விதத்தில் சுருக்கமாக சில சித்திரங்கள் வாயிலாக யெகோவாவின் சாட்சிகள் சபையினர் அருமையாக விளக்கி உள்ள சித்திரக்கதைதான் இந்த மோசே எகிப்தில் வளர்கிறார். உங்கள் பகுதி கிறிஸ்தவ நண்பர்கள் இருந்தால் இந்த கதையினை வாட்ஸ் அப் அல்லது வேறு வழிகளில் பகிரலாமே? அவர்தம் குழந்தைகளுக்கு சொல்லித் தர ஏதுவாக இருக்கும் அல்லவா? இந்த வேண்டுகோளை க…

ஒரு எலும்புக் கூட்டின் காவியம் _GG Studio Comics_fan boosting

Image
அன்புடையீர்! அனைவருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்! கங்கா ஸ்நானம் ஆய்டுத்தா! நன்னா எண்ணையை தலையில் வெச்சு தேய்ச்சி குளிச்சி, பட்டாசு, பலகாரம் என இன்றைய தினம் கலக்குங்க. நம்ம சார்பில் ஜி.ஜி.ஸ்டுடியோ வின் கலக்கலான வர்ணங்கள் நிறைந்த இந்த கதையை மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறேன்! இந்த கதை பிடிச்சிருந்தால்  செய்து அந்த காமிக்ஸ் குழுவினருக்கு தங்கள் ஆதரவை நல்கிடுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! 

மலை மேல் மர்மம்_தினமணி கதிர் காமிக்ஸ்!!!

Image
வணக்கம் வாசக நண்பர் படைகளே! பட்டாஸ் வாங்கிட்டீங்களா? எல்லா தீபாவளி சிறப்பிதழும் வாங்கிக் குவிச்சிட்டிங்களா? தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பாகவும், என் வலைப்பூ சார்பிலும் தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ஹாப்பி தீப ஒளி நல்வாழ்த்துக்கள்! வெடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட தீபமேற்றுவதற்கு முதலிடம் கொடுங்களேன். நரகாசுரன் என்கிற அரக்கன் மானிடரையும், தேவரையும், முனிவர் பெருமக்களையும் வாட்டி வதைத்த போது விஷ்ணு அவதரித்து அரக்கர் படையினை நசுக்கி நரகாசுரனை அழித்த போது தனது நினைவாக இந்த திருவிழாவினைக் கொண்டாட அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அவனது அழிவினை தீபம் ஏற்றி, வெடி வெடித்துக் கொண்டாடுவதாக ஐதீகம்.  இந்த வருடம் டமால் டுமீல் எல்லாம் அருமை நண்பர்களது புண்ணியத்தில் முக நூல் பக்கங்களில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றன. தீண்டத் தீண்ட இனிக்கும் தீந்தமிழின் பொடினியின் முத்தம், பொன்னால் இழைத்த வேலின் பொடியன் பென்னி, அயல் நாட்டு காமிக்ஸ் காதலர்களின் பாரகுடா, ஆர்பிட்டல் என தமிழுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிற கதைகளை அடையாளம் காட்டும் முயற்சியாக பல கதைகள…