Posts

Showing posts from 2015

இவன் வேறு மாதிரி.

-பொங்கல்.

-தீபாவளி.

-புத்தாண்டு.

-கிறிஸ்மஸ்.

-மிலாடி நபி. 

-ஈஸ்டர். 

-ரம்ஜான் என்று எத்தனை எத்தனைக்

கொண்டாட்டம் வந்தாலும் 

கொண்டாட வருவோரை 

வாவாவென்றும்,

கொண்டாடிப் பிரிவோரை 

நின்று செல் என்றும் 

உறவினராக இல்லை 

நாங்க ரொம்ப நல்ல வாசகர்களப்பா...

Image

கரைந்து மறைந்தவன்...

இனம் பார்த்துப் பழகினேன் இடியுண்டு விழுந்தேன்.
மதம் பார்த்துப் பழகினேன் மனமொடிந்து போனேன்.
சமூகம் பார்த்துப் பழகினேன் சதி சறுக்கி விழுந்தேன்.
மொழி பிரித்துப் பழகினேன் விழி நீர் வீழ விலகினேன்.
கட்சியின் வெளிச்சத்தில் கரை வெட்டிகளின் பளபளப்பில்
தோரணங்களின் மயக்கத்தில் விண் தொடும் விளம்பரங்களைப்
பார்த்துக் கலந்தேன். கால் தடுக்கி வீழ்ந்தேன்.
சாக்கடை மீதென் இனிய வதனம். இனி எழுவது சாத்தியமே இல்லை
என்றானதும் அப்படியே மறைந்து போனேன் சூரியனின் முன் பனியாக.

ஆம்.  நான் கரைந்து மறைந்தவன்.

from the story of jesus..

Image
வணக்கம் தோழமை உள்ளங்களே. அனைவருக்கும் வரும் கிறிஸ்துமஸ் தின முன் கூட்டிய நல்வாழ்த்துகள். புயல் வந்து கிழித்துப் போட்டது போன்று தாறுமாறாகக் கிடக்கும் தமிழகத்தில் உணவுப் பொருட்களை அள்ளி வழங்கிய அத்தனைக் கரங்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். உங்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக.   

மீண்டும் சந்திப்போம். என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்.

Image
வணக்கம் தோழமை உள்ளங்களே,
சென்னையை மொத்தமாக நனைத்தும், தமிழகத்தை ஒட்டுமொத்தமாகக் குளிப்பாட்டியும் கூவ நதி முதல் ஜீவ நதிகளெங்கும் பெருவெள்ளம் காணச் செய்து ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் பெய்த பெரு ஊழி வெள்ளத்தைக் கண் முன்னே கொண்டு வந்து மக்களிடையே மனிதாபிமானத்தைத் திரும்பவும் நிலைநாட்டி, நிலையாமையை நெஞ்சில் பதித்துக் கொள்ள ஒரு வாய்ப்பளித்துப் பேருவகை புரிந்த மழை கற்றுக் கொடுத்த பாடங்கள் என்ன?நன்றி தின மலர்.

நன்றி தினத் தந்தி.

நன்றி: தின மணி

நன்றி: தினகரன்.
அவர் ஒரு தேநீர் விற்பனையாளர். மிதி வண்டியில் தினமும் தேநீர் கொண்டு சென்று விற்பனை செய்பவர். அவரது பிழைப்பே அதுதான். இரண்டு தினங்களுக்கு முன் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து விட்டார். மிதி வண்டி தனியே விழுந்து விட்டது. அவர் சமயோசிதமாக செயல்பட்டு வட்ட வடிவ இரும்பு விளிம்பினைப் பற்றிக் கொண்டு குரல் கொடுத்ததால் மக்கள் உடனடியாக உதவிக் கரம் நீட்டி அவரைக் காப்பாற்றினர். நெருக்கடியிலும் அவர் உயிரைக் காத்தது அவரது சமயோசிதம். மக்களின் உதவிக் கரங்கள். இதனை ஒரு உதாரணமாகக் கொண்டு அனைத்து நண்பர்களும் நீங்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் சமயோசிதமாக முடி…

ஒரு இரசிகனின் ஆர்வத்தில்....

Image

வாழ்ந்தது போதுமா? _நிறைவின் வாயிலில்..!_vazhnthathu pothuma_a comics series from veerakesari magazine! final episode.

Image
வணக்கங்கள் மற்றும் வந்தனங்கள் தோழமை நெஞ்சங்களே!
கடந்த பத்து மாத காலங்களாகக் கிண்டிக் கிளறி இறக்கி ஆற வைத்துப் பரிமாறும் இந்த அரிய புத்தகம்தான் இன்றைய பதிவு.
வீரத்தைக் கேசரியாகக் கிண்டிக் கிளறிப் பரிமாறி வெறுமே வாழ்ந்தது போதுமா? காமிக்ஸ் சுவையைக் கொஞ்சமே கொஞ்சமாகக் கூட சேர்த்து வாழ்வின் ருசியை உணருங்களேன் என்கிற கோரிக்கையுடன் பத்து மாதங்களாகச் சுமந்து திரிந்து கொண்டிருந்த சித்திரக்கதை இந்த "வாழ்ந்தது போதுமா?"
முதல் பதிவு:
http://johny-johnsimon.blogspot.in/2015/01/001-vazhnthathu-pothumaa-comics-series.html

ஒரு தொடரைத் தொடர் போன்றே வெளியிட்டால் நம் உடனடி உணவுப் பிரியர்களின் காலக்கட்டத்தில் எத்தனைப் பேர் தாக்குப் பிடித்து வாசிப்பார்கள் என்கிற ஆராய்ச்சியின் (ஹி ஹி உங்கள் பொறுமையை பொறித்து வறுத்து எடுத்து) விளைவாகத்தான் இந்த வாழ்ந்தது போதுமா சித்திரத் தொடரை சித்திர வடிவாகவே வெளியிடும் (கிறுக்கு?) யோசனை என்னுள் உதயமானது.
பத்து மாதங்கள் கருவாகச் சுமந்து, தமிழ்-ஈழத் தமிழ் சுவையைக் கலந்து உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த நாட்கள் என் வாழ்வில் விசேடமானவை. இந்த நாட்களில் யாரும் சீக்கிரம்…