Posts

Showing posts from April, 2015

உழைப்பாளர்களுக்கு சல்யூட்!

Image
வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே!
மே ஒன்றாம் தேதி பிரதி வருடம் உழைப்பாளர் தினமாகக் கடந்து செல்கிறது. அவர்களது வியர்வையும், இரத்தமும், தேசங்களைக் கட்டி எழுப்புகின்றன. அவர்களுக்கு கொஞ்சம் அட்வான்சாக நன்றி தெரிவித்துக் கொண்டாடும் விதமாக இந்தப் பதிவை அர்ப்பணிக்கின்றேன்.  நாம் இன்று அனுபவித்து வரும் அனைத்து வசதிகளும், முன்னர் யாரோ சிந்தித்து அதனை செயல்படுத்தி அதன் பலனையே அனுபவித்து வருகிறோம் அல்லவா. ஒரு சிலரைத் தவிர அந்த உழைப்பாளிகள் முறைப்படி கவுரவிக்கப்படுவதோ, சரித்திர ஏடுகளில் நினைவு கூறப்படுவதோ இல்லை. ஆனால் அவர்களது கடின உழைப்பும், பொறுமை நிறைந்த பணியும் காலம் கடந்தும் நம்மை சகல வசதிகளுடனும் வாழ்விக்கிறது. அப்படி ஒரு உழைப்பாளர்களின் திரள்தான் இரயில்வே துறையின் கட்டுமானப் பணியாளர்கள். இந்தியா 1853 ஆம் வருடம் மும்பையில் இருந்து தானே வரையிலான இரயில் என்ஜினை இயக்கியது சரித்திரம்.  https://www.google.co.in/search?q=1853+railway+in+india&es_sm=93&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=2iA9VdD7IIuegwTujYHICQ&ved=0CDUQsAQ
சென்னை டு ஆற்காடு வரையிலான இரயில் தடம் இன்னும் மூன்று…

Shriram _கனவு பலித்ததே!!!

Comics: கனவு பலித்ததே!!!: எனது சந்தோஷ அளவினை சொல்ல முடியவில்லை... மின்னும் மரணம் எனும் கதையினை நான் இதுவரை முழுவதுமாக தமிழில் படித்ததில்லை ... ...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Image
சித்திரையில் நித்திரை தொலைத்து புத்தம் புதியதோர் ஆண்டினில் முத்திரை பதிக்கக் காத்திருக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
நித்தமும், அலுப்பும், சலிப்புமென விடைபெறும் நாட்களுள் புத்தம் புது ஆண்டானது மலர்கையில் ஆங்கே நம்பிக்கை எனும் கீற்று அடிவானின் சூரியனாக சுடர்விட்டு எழும்பிடும் நமது நெஞ்சங்களில். புது ஆண்டு புது திட்டங்களுக்கான வாயிலாக நின்று உங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான சக்தியை நல்கிட இறைவனை வேண்டுகின்றேன்.
அம்பேத்கார் அவர்களது நினைவாக ஆங்காங்கே பாடல்களும் பரபரப்புகளும், கட்சிக் கொடிகளும், புத்தர் வணக்கங்களும் என நிறைவானதொரு அனுபவமாக மலர்கிறது இன்று....
வாழ்ந்தது போதுமா சித்திரக்கதையின் பதினேழாம் அத்தியாயத்தின் வாயிலாக நம் தமிழை வாழ வைக்கும் இலங்கை சந்ரா அவர்களின் நினைவாகவும் தமிழுக்கு அவர் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் வாயிலாகவும் அவரது இந்தக் கதையின் பாகத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
    என்றும் அதே தமிழ் மீதான தீராக் காதலுடன்_உங்கள் இனிய நண்பன் ஜானி!

காமிக்ஸ்கள் மொத்தமாக விற்பனைக்கு....

வணக்கம் நண்பர்களே! என் நண்பர் தவமணி அவர்கள் விற்பனைக்கு தனது காமிக்ஸ் சேகரிப்பை மொத்தமாக கொண்டு வந்துள்ளார். வாங்குவோர் தொடர்பு கொள்க. contact :chickbill123@gmail.com கைவசம் உள்ளவை
முத்து காமிக்ஸ் 1 மீண்டும் முதலைகள்
2 பழி வாங்கும் புகைப்படம்
3 குள்ள நரிகளின் இரவு
4 வைர வேட்டை
5 நரகத்தின் நடுவில்
6 புயல் தேடிய புதையல்
7 திசை திருப்பிய தோட்ட
8 காற்றில் கரைந்த பாலர்கள்
9 நள்ளிரவு நாடகம்
10 மிஸ்டர் முகமுடி
11 கல்லறையில் ஒரு கவிஞன்
12 மரண மண்
13 மரணத்தின் நிறம் கருப்பு
14 பரலோக பாதை
15 சிறையில் ஒரு புயல்
16 யானை கல்லறை
17 காற்றில் கரைந்த கதாநாயகன்
18 புயல் படலம்
19 மின்னல் ஜெர்ரி
20 புதையல் பாதை
21 கதை சொல்லலும் கொலைகள்
22 தோட்ட தலைநகரம்
23 துரத்தும் தோட்டா
24 விசித்திர வில்லன் லயன் காமிக்ஸ் 1 கொலை செய்ய விரும்பு
2 மர்ம மைனா
3 புலி வருது
4 கிசு கிசு மரணம்
5 மியாவ் மியாவ் மரணம்
6 திகில் நகரம் டோக்கியா
7 ஆவியின் பாதையில்
8 கடலோரக் கொலைகள்
9 தலை வாங்கும் தாரகை
10 வெள்ளைய ஒரு வேதாளம்
11 தேடி வந்த தூக்குகயிறு
12 ்இரத்தப்படலம் 7
13 ்இரத்தப்படலம் 8
14 ்இரத்தப்படலம் 4
15 பனியில் ஒரு நாடகம்
16 கனவே கொல்லாதே
17 தலைகிழ்லாய் ஒரு தினம்
18 வ…

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 076-106 வரையிலான குறிப்புகள்!

வணக்கம் தோழமை உள்ளங்களே! இந்திய தண்டனை சட்டத்தின் அத்தியாயம் நான்கின் குறிப்பு பகுதியினை உங்களுடன் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். என்ஜாய்! இது இந்திய சட்டத்தினை தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவிடும் விதத்தில் சிறு குறிப்பாக மட்டும் பகிரப்படுகிறது என்பதையும் மறுபடியும் நினைவூட்டுகிறேன். அத்தியாயம் _ நான்கு_விதி விலக்குகள் இ.த.ச. பிரிவு – 76 சட்டப்படி கடமையாற்றும் பொது ஊழியர் செயலில் தீங்கு ஏற்பட்டாலும் குற்றமாகாது. இ.த.ச. பிரிவு – 77 சட்டப்படி நீதிபதி தண்டிப்பதால் அவர் செயல் குற்றமாகாது. இ.த.ச. பிரிவு – 78 உத்தரவு (அ) தீர்ப்புப்படி காரியம் செய்பவர் மீது குற்றமாகாது. அம்மன்றத்துக்கு உத்தரவிட அதிகாரமில்லை என்றாலும் குற்றமாகாது. இ.த.ச. பிரிவு – 79 சட்டப்படி கடமையாற்றுகிறவர் நல்லெண்ணத்துடன் சரியானதென நம்பி செய்வதில் எதிர்பாராமல் தவறு நேர்ந்தாலும் குற்றமாகாது. இ.த.ச. பிரிவு – 80 சட்டப்படியும், கருத்துடனும், கவனத்துடனும் குற்றக் கருத்தின்றி செய்யும் செயலால் துன்பம் (அ ) விபத்தானால் குற்றமாகாது. இ.த.ச. பிரிவு – 81 குற்றக் கருத்தின்றி நல்லெண்ணத்துடன் பெரிய தீங்கு நேர்வதைத் தடுக்க செய்யும் சிறு காரியம் …

வாழ்ந்தது போதுமா? _016_1972_veera kesari Magazine from Sri Lanka

Image
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே!  ஈழத்துத்தமிழ் மணக்க எழுத்தப்பட்ட இந்த சந்ரா அவர்களது சித்திரக்கதை மிக அபூர்வமான ஒன்று. இதனை தமிழ் மண்ணில் இத்தனை காலம் பாதுகாத்து வைத்திருந்து இன்று நம்முடன் பகிர்ந்து கொண்ட தமிழ் காமிக்ஸ் ரசிகர் திரு. அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்கள் போலவே இன்னும் அரிய சித்திரக்கதைகளை பாதுகாத்து புதையலாக எண்ணி வைத்து வரும் அரிய நபர்களை இந்த வலைப்பூதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. இன்று வாழ்ந்தது போதுமா? தனது பதினாறாவது அத்தியாயத்தினை எட்டிப் பிடிக்கும் வேளைதனில் உங்களுக்கு ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேர் இது போன்ற அரிய தொடர்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளீர்கள்?  நிற்க. இந்த வாழ்ந்து போதுமா கதையமைப்பு உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதா? இல்லை....நீங்கள் இரசித்துப் படித்து விட்டு கருத்தேதும் பதியாமல் செல்லும் எண்ணம் கொண்டவரா? ஏன் என்று கேட்டால் இடையே சிறிது தினங்கள் தொடர்ச்சி விட்டு விட்டு காத்திருந்தேன். எவருமே இந்த தொடரினைக் குறித்து இங்கு கதைக்கலை. என்ன நண்பர்களே? சரிதானா? அது குறித்து விவாதிக்கப் போவதுமில்லை இங்கே. எனக்கு நேரம் இருக்கும்போது, இதன் அத்தனைப் பாகங்களும் அ…

வாழ்ந்தது போதுமா? _015_1972_veera kesari Magazine from Sri Lanka

Image
இந்த தொடரை பாதுகாத்து வழங்கி உதவிய திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கு நன்றிகள். தொடரின் மற்ற பாகங்களையும் வாசித்து விட்டு தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன். என்றும் அதே அன்புடன் ஜானி!

மனிதர்கள்....

வணக்கம் நண்பர்களே!
உலகில் எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை தனிப்பட்ட உலகங்கள் உண்டு என்று எங்கோ ஒரு சிந்தனையாளர் தனது சிந்தனையை செதுக்கிச் சென்றார். எனக்கு ஒரு பெரியவரைத் தெரியும். அவர் ஆயுதப்படையில் காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் முகாம் எழுத்தராகப் பணிபுரிகிறார். அவரது விசேஷமான செய்கை என்னவெனில் ஒவ்வொரு புத்தாண்டு மலரும் வேளையிலும் தன் வட்டாரத்தில் தனக்கு உதவியாளராகப் பணியிலுள்ள அனைவரையும் அழைத்து தன் கையொப்பமிட்ட பத்து ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகக் கொடுத்து இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா செல்வ வளங்களையும் வாரி வழங்கட்டும். எனது ஆசீர்கள் என்பார்.  அது அவரது சிந்தனை. அவரின் எண்ணம் உயர்வானது என்பதால் ரூபாய் நோட்டில் செய்த இனிசியலை பெரிதாக்காமல் அந்த ரூபாய் நோட்டினை வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கும் நண்பர்கள்தான் அதிகம். வருடத் துவக்கம் இது போன்று கிடைக்கும் அபூர்வப் பரிசுகள் மனதுக்கு நெகிழ்ச்சியை கொடுக்க வல்லவைதானே!  தான் ஆடாவிட்டாலும் தன் தசை  ஆடும் என்பது முதுமொழி. முன்தினம் இரவு சுமார் இரண்டுக்கு மேல் நெஞ்சைப் ஒரு இம்சை வந்து பிசைவதாகவே தோன்றியது. அது வலியுமல்ல. ஏதோ ஒன்று …

ஒரு குசும்பு பிடித்த வாசகரின் கைவண்ணம்!!!

Image
வணக்கம் நண்பர்களே! காமிக்ஸ் வாசித்து ரசித்த குழந்தைத்தனமான பருவத்தில் நம் கைகளில் காமிக்ஸ்கள் என்ன பாடு பட்டிருக்கின்றன பாருங்கள். இப்படி ஒரு அட்டகாசமான அமர்க்களமான பருவத்தைத்தான் நாம் காலப்போக்கில் இழந்து விட்டிருக்கிறோம்.   நன்றிகள்: நண்பர் சரவணாrsk......  வேறென்னங்க! வண்டி ஓட்டும்போது பார்த்து ஓட்டுங்க. வெயிலை நினைத்து தலைக்கவசம் (ஹெல்மட்) அணிவதைத் தவிர்க்காதீங்க! யாராவது நடந்து போறவங்க தெரியாத்தனமா குறுக்கே வந்துட்டா வண்டி ஆக்சிலரேட்டரை முறுக்காதீங்க. போனா போவட்டும்னு கொஞ்சம் விட்டுக் கொடுங்க. ஜாலியா இருங்க. இன்னிக்கு சேதி அவ்ளோதாங்க. என்றும் அதே அன்புடன் உங்கள் தோழன் ஜானி!

ஈஸ்டர் திருவிழா நல்வாழ்த்துக்களுடன்....ஜானி!

Image
இறைமகன் இயேசுவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இயேசுவின் உயிர்த்தெழுதலின் நினைவாகக் கொண்டாடப்படும் தினம்தான் ஈஸ்டர். மக்களுக்காகவே மரித்தார். மக்களுக்காகவே உயிர்த்தார். மக்களுக்காகவே மீண்டும் வருவார். இறுதித் தீர்ப்புதினம் அவர் கரங்களில் உள்ளது. இதுவே கிறிஸ்துவைப் பின்பற்றும் எங்களது நம்பிக்கை. நண்பர்களுக்கு இம்முறை ஒரு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சித்திரக்கதையினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள். இந்த சித்திரக்கதையினை அன்பளித்து உதவிய அன்பு நண்பர் தமிழ் காமிக்ஸ் உலகம் பதிப்பாசிரியர் திரு.கிங் விஸ்வா அவர்களுக்கும், புத்தகத்தினை அருமையாக வலைப்பூவுக்கு ஏற்றவிதத்தில் மேம்படுத்த ஆலோசனைகள் கொடுத்து உதவிய தமிழ் காமிக்ஸ் டைம்ஸின் நிர்வாகியுமான நண்பர் திரு சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வரலாறு என்பது நடந்த ஒன்றின் பதிவே. விவிலியம் உணர்த்தும் வரலாற்றில் இறைமகன் இயேசு விண்ணிலிருந்து மானிடராகப் பிறந்து மரியாளின் அன்பிலும், யோசேப்பின் அரவணைப்பிலும் உலகில் உலவி …

தவிர்க்கலாமே?

Image