Posts

Showing posts from October, 2015

வாழ்ந்தது போதுமா? _நிறைவின் வாயிலில்..!_vazhnthathu pothuma_a comics series from veerakesari magazine! final episode.

Image
வணக்கங்கள் மற்றும் வந்தனங்கள் தோழமை நெஞ்சங்களே!
கடந்த பத்து மாத காலங்களாகக் கிண்டிக் கிளறி இறக்கி ஆற வைத்துப் பரிமாறும் இந்த அரிய புத்தகம்தான் இன்றைய பதிவு.
வீரத்தைக் கேசரியாகக் கிண்டிக் கிளறிப் பரிமாறி வெறுமே வாழ்ந்தது போதுமா? காமிக்ஸ் சுவையைக் கொஞ்சமே கொஞ்சமாகக் கூட சேர்த்து வாழ்வின் ருசியை உணருங்களேன் என்கிற கோரிக்கையுடன் பத்து மாதங்களாகச் சுமந்து திரிந்து கொண்டிருந்த சித்திரக்கதை இந்த "வாழ்ந்தது போதுமா?"
முதல் பதிவு:
http://johny-johnsimon.blogspot.in/2015/01/001-vazhnthathu-pothumaa-comics-series.html

ஒரு தொடரைத் தொடர் போன்றே வெளியிட்டால் நம் உடனடி உணவுப் பிரியர்களின் காலக்கட்டத்தில் எத்தனைப் பேர் தாக்குப் பிடித்து வாசிப்பார்கள் என்கிற ஆராய்ச்சியின் (ஹி ஹி உங்கள் பொறுமையை பொறித்து வறுத்து எடுத்து) விளைவாகத்தான் இந்த வாழ்ந்தது போதுமா சித்திரத் தொடரை சித்திர வடிவாகவே வெளியிடும் (கிறுக்கு?) யோசனை என்னுள் உதயமானது.
பத்து மாதங்கள் கருவாகச் சுமந்து, தமிழ்-ஈழத் தமிழ் சுவையைக் கலந்து உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த நாட்கள் என் வாழ்வில் விசேடமானவை. இந்த நாட்களில் யாரும் சீக்கிரம்…

யெகோவா கிதியோனைத் திடம் பண்ணுகிறார்...!

Image
வணக்கங்கள் இறைவனின் அன்பிற்குப் பாத்திரமானவர்களே.
இன்று நாம் வாசிக்கவிருக்கும் சித்திரக்கதை யெகோவாவின் சபையினரது உருவாக்கத்தில் வெளியாகி உள்ள சரித்திரக் கதை. அவர்களது குழுவினருக்கு நன்றியும், அன்பும். 
கிதியோன் ஒரு சாதாரண மனிதன். திடீரென்று இறைவனிடத்தில் இருந்து வரும் அழைப்பை மறுக்காமல் ஏற்று அதன்படி நடந்து வெற்றியை ஈட்டுகிறார். விவிலியம் உரைக்கும் மனிதர்கள் வரிசையில் இவருக்கு ஒரு அருமையான  இடம் உண்டு. அவரைத் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு நியாதிபதியாக மாற்றினார். இறைவனின் திருச்சித்தத்தின்படி நடக்கிறவர்கள், பேறு பெற்றவர்கள்.

வாசிக்கப் போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இறை நம்பிக்கையும், விசுவாசமும் இருந்தால் எப்படிப்பட்ட பெரும்படையினையும் அஞ்சி ஓடச் செய்து விடலாம் என்பதற்கான ஒரு முன்னுதாரணமே இந்தக் கதை.  வாசித்து மகிழ்ந்த உள்ளங்களுக்கு நன்றிகள்.  என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.

ஒரு பிரியாணியின் கதை...

திகட்டத் திகட்டத் தின்று உறங்கினேன் சிக்கன் பிரியாணி, நேற்றிரவு காலை எழுப்பியது எங்கோ ஒரு  சேவலின் கொக்கொரக்கோ கூவல் மனதின் உள்ளே ஒரு
உதறல் –அடடா.

வீரகேசரி - ஒரு வித்தியாசமிகு விளம்பரம்.

Image
வணக்கம் வாசக நெஞ்சங்களே.
இந்த விளம்பரத்தை ஏற்கனவே நமது வலைப்பூவில் அளித்துள்ளேன். இத்தனை காலமாக இந்தத் தொடரைத் தொடர் போன்றே கொண்டு வர எண்ணி இருந்தாலும் நேரமும் காலமும் சிறிதே சிறிது நீட்டி விட்டது, தாங்கள் அறிந்ததே. ஆனால் இந்த விளம்பரம் கூறும் செய்திகளை யாரெல்லாம் உற்று நோக்கி இருக்கிறீர்கள்?

*முதல் விளம்பரம் ராஜ ஸீமா என்று ஒரு தியேட்டர் இருப்பதாகவும் அங்கு சிவாஜி - ஜெயலலிதா நடித்த பட்டிக்காடா பட்டணமா என்ற திரைப்படம் விரைவில் திரையிடப்பட விருப்பதாகவும் என்றோ ஒரு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து இரண்டுகளில் ஒரு அக்டோபர் மாத வியாழனில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

*சற்று கீழே உற்று நோக்கினீர்கள் என்றால் நமது சித்திரக்கதை நாயகர்களில் குறிப்பிடத்தக்க பாத்திரமான டேஞ்சர் டயபோலிக்கின் ஆங்கில வண்ணப்படம் காலை பத்தரை மணிக்கு மட்டும் ராஜ ஸீமாவில் திரையிடப்படுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கவனித்தீர்களா? இது மிகவும் அரிதான ஒரு செய்திதானே? நமது நாயகன் அபாய மனிதன் டயபோலிக் நம் மண்ணையும் தொட்டுவிட்டுத்தான் இலங்கை சென்று இருப்பான் இல்லையா? அதன் பின்னரே லயன் காமிக்ஸ் மூலமாக 1987 வாக்கில், நாற்பத்து ந…

வாழ்ந்தது போதுமா? சில துளிகள்....

Image
“வாழ்ந்தது போதுமா” என்கிற இந்த சித்திரக் கதை 19.10.1972 – 15.02.1973 வரையிலான காலக்கட்டத்தில் வீர கேசரி நாளிதழின் ஒரு பகுதியாக வெளியாகியுள்ளது.வாழ்ந்தது போதுமா கதாசிரியர் மற்றும் ஓவியர் திரு.சந்ரா அவர்கள் தொண்ணூற்று ஏழு அத்தியாயங்களில் இந்தக் கதையினை செதுக்கி இருக்கிறார்.  
தொடர் தொடர்ந்து வெளியான காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பது நிச்சயம். இந்தக் கதையின் ஆசிரியர் இதனை வடிவமைத்த விதமே அலாதியானது. எந்த இடத்திலும் ஊர்ப் பெயரோ, இடத்தின் பெயரோ குறிப்பிடப் படாமல் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இதனை தங்கள் நாட்டில் (இந்திய, இலங்கை) நடைபெறும் கதையாகவே எண்ணிப் படித்து இன்புற முடியும். கதையில் இரண்டு பெயர்களை சூடிக் கொண்டு அலையும் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கது. குமார் என்கிற முத்து, சிங் என்கிற சிங்காரம், ஜெயஸ்ரீ என்கிற நந்தினி என்று இரண்டு பேரிட்டு அழைக்கும்படியாக கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பது இந்தக் கதையின் சிறப்பு. இக்கதையில் மெல்லியதாக ஓடும் ஈழத் தமிழ் உச்சரிப்பு இதன் தனிச்சிறப்பு. இது போன்று வேறு ஒரு ஈழத் தொடர்புடைய சித்…